fbpx

”காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் பாஜக”..!! ”நீங்களே நல்ல முடிவா எடுங்க”..!! முதல்வர் சித்தராமையா பரபரப்பு பேட்டி..!!

காவிரி விவகாரத்தில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரியாற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு நாடியது. தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு, தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், ”காவிரி விவகாரத்தில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். வெறும் அரசியலுக்காகவே பாஜக காவிரி விவகாரத்தை பற்றி பேசி வருவாதாகவும், கர்நாடக மக்களுக்காக அல்ல எனவும் கூறினார். மழை குறைவாக உள்ளதால், உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை ஆணையமும் ஒரு தெளிவான தீர்வை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

ஐபோன் 15 சீரிஸ் ரூ. 43500 வரை தள்ளுபடி!… HDFC வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!… என்ன தெரியுமா?…

Tue Sep 26 , 2023
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ் போன்கள், ரூ.43500 வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். Apple iPhone 15 சீரிஸ் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.79,900-லிருந்து தொடங்குகிறது. தற்போதுள்ள Apple iPhone வாடிக்கையாளர்கள் iPhone 15-ஐ ரூ.40,000-க்கும் குறைவாக வாங்க பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தலாம். நான்கு புதிய போன்களில் மலிவான ஐபோன் 15, இந்தியாவில் 128 ஜிபி வகைக்கு ரூ.79,900 விலையில் […]

You May Like