fbpx

ட்விஸ்ட்…! ரேபரேலி தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்த பாஜக..‌!

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தில் அமைச்சராக உள்ள தினேஷ் பிரதாப் சிங்கை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.

காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தில் அமைச்சராக உள்ள தினேஷ் பிரதாப் சிங்கை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. 2004 முதல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தல் வேட்பாளராக தினேஷ் பிரதாப் சிங்கை பாஜக அறிவித்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகி 2018 இல் பாஜகவில் இணைந்து 2019 இல் சோனியா காந்திக்கு எதிராகப் போட்டியிட்ட சிங், அவரும் ரேபரேலியில் உள்ள கட்சித் தொண்டர்களும் கடந்த ஆறு மாதங்களாக போட்டிக்குத் தயாராகிவிட்டதாகக் குறிப்பிட்டார். தங்களது கடின உழைப்பு “எந்த கோட்டையையும் வீழ்த்த முடியும் என்று அவர் கூறினார்.

ரேபரேலி தொகுதியை முன்பு சஞ்சய் காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். ரேபரேலி மக்களின் தேவைகளை காந்தி குடும்பம் ஒருபோதும் நிறைவேற்றவில்லை என்றும், இங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நாளும் வந்ததில்லை என குற்றம் சாட்டினார். தினேஷ் பிரதாப் சிங் தற்போது உத்தரபிரதேச அரசில் மாநில அமைச்சராக உள்ளார். காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

Special Bus: வரும் 4,5 தேதிகளில் சென்னையில் இருந்து 965 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

Fri May 3 , 2024
வரும் 4,5 தேதிகள் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வரும் 4,5 தேதிகள் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு […]

You May Like