டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று ஆலோசனை நடைபெறுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆம் ஆத்மியின் அமைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க பாஜக தயாராகி வருகிறது. அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.
முதல்வர் போட்டியில், அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்சுரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பெயர்கள் முதல்வர் தேர்வுக்கு அடிபடுகின்றனர். அதேபோல், மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, பாஜக எம்பி மனோஜ் திவாரி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.