fbpx

விருதுநகரில் பாஜக உட்கட்சி பூசல்..!! ஏமாற்றத்துடன் பாதியிலேயே சென்னைக்கு புறப்பட்ட ராதிகா..!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவில் இணைத்தார் சரத்குமார். அதிமுகவில் இருந்து 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து, பாஜகவின் விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த இவர் அங்கே பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு, பரப்புரையை ரத்து செய்து சென்னை புறப்பட்டுச் சென்றார். சிரித்த முகத்தோடு வந்தவர், கூட்டம் இல்லாததால் சிரிப்பை மறந்து டென்சன் ஆனார். கூட்டம் வரும் என்று காத்திருந்தவர் கடைசியில் அங்கிருந்து சென்றார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், கூட்டம் சேரவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அங்கே ராதிகாவை வேட்பாளராக நியமித்ததை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. நேற்று விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் விருதுநகரில் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், நேற்று கூட்டத்தில் ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர்வாகிகள் யாரும் வராமல் ஏமாற்றம் அளித்துள்ளனர். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

Read More : செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் அதிரடி உயர்வு..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Chella

Next Post

Train | ரயில் பயணிகளே..!! உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா..? நிர்வாக கொடுத்த பதில்..!!

Thu Mar 28 , 2024
ரயில்களில் பயணம் செய்யும்போது, டிக்கெட் இல்லாமல் பலர் ஏறி சீட்டுகளை ஆக்கிரமிப்பு செய்தால், என்ன செய்வது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. நாட்டில் மக்கள் பலர் அதிகமாக ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். பலர் ரயில்களில் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்று டிக்கெட்டுகளை முன்னதாகவே முன்பதிவு செய்கின்றனர். ஆனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் அதிகளவில் விற்பனையானால், […]

You May Like