fbpx

கல்லூரி மாணவியை உல்லாசமாக இருக்க… ஹோட்டலுக்கு அழைத்த பாஜக பிரமுகர்… ஹனி டிராப் வழக்கில் திடீர் திருப்பம்..!

தட்சிண கன்னடா மாவட்ட மங்களூருவை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் ஆர்.ஆர்.எஸ்.சிலும் உறுப்பினராக இருக்கிறார். மேலும் சொந்தமாக தங்கநகைகள் விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் மண்டியாவிற்கு வியாபார விஷயமாக சென்ற இவரை சிலர் மைசூருவிற்கு கடத்தி சென்று அங்கு தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்பட்டது.

மேலும் அந்த கும்பல் ஜெகநாத் ஷெட்டி இளம் பெண்ணுடன் இருந்த வீடியோ காண்பித்து மிரட்டி ஹனி டிராப் முறையில் ரூ.50 லட்சம் பறித்ததாக கூறி அவர், மண்டியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், காங்கிரசை சேர்ந்த பெண் பிரமுகர் சல்மா பானு உட்பட சிலரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக ஜெகநாத் ஷெட்டி கல்லூரி மாணவி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ பரவிவருகிறது. அந்த வீடியோவில் ஜெகநாத் ஷெட்டி கல்லூரி மாணவியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று, இருவரும் ஓட்டல் அறையில் தனியாக அமர்ந்து பேசுவது போல் வீடியோ பதிவாகியுள்ளது.

மேலும் ஹோட்டலுக்கு வருவதற்கு முன்பாக ஜெகநாத் அந்த மாணவிக்கு வாட்ஸ் ஆப்பில் மெஸேஜ் அனுப்பி ஹோட்டலில் உல்லாசமாக இருக்க அழைத்த தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மற்றும் மெஸேஜ், இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. எனவே இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையில் வீடியோ மற்றும் மெஸேஜ் உண்மையாக இருந்தால், ஜெகநாத் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Rupa

Next Post

மின்சாரம் தேவையில்லை.. சூரிய ஒளியால் சார்ஜ் செய்யப்படும் முதல் எலக்ட்ரிக் கார்.. விரைவில் அறிமுகம்..

Sat Sep 10 , 2022
அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அதிகரித்து வரும் மாசுபாடு, ஆகியவை காரணமாக அதிகமான மக்கள் மின்சார கார்களை வாங்க விரும்புகின்றனர்.. இதன் காரணமாக மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதிய வசதிகளுடன் கூடிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சோனோ மோட்டார்ஸ் நிறுவனம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் மின்சாரக் காரை அறிமுகம் செய்ய உள்ளது.. […]

You May Like