கோவாவில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு இட்லி-சாம்பார் மற்றும் வடை பாவ் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ குற்றம் சாட்டியுள்ளார். கடற்கரை குடில்களில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதே கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்திற்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம் என்று கோவா அமைச்சர் கூறினார்.
வடக்கு கோவாவின் கலங்குட்டில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய லோபோ, கடலோர மாநிலத்திற்கு குறைவான வெளிநாட்டினர் வருகை தந்தால் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. பெங்களூரைச் சேர்ந்த சிலர் குடில்களில் ‘வடை பாவ், இட்லி சாம்பார்’ விற்பனை செய்கிறார்கள். இதனால் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் சர்வதேச சுற்றுலா குறைந்து வருகிறது.
மேலும், அனைத்து பங்குதாரர்களும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். சுற்றுலா துறை மற்றும் இதர பங்குதார்ரகள் இணைந்து கூட்டம் கூட்டி, கோவாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது என்பதற்காக காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.