fbpx

“20 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்” – பாஜக-விற்கு கே.எஸ் அழகிரி எச்சரிக்கை.!

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆன கே எஸ் அழகிரி பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தேர்தலை சுட்டிக்காட்டி பாஜக கட்சியினருக்கு எச்சரிக்கை உடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

சமீபத்தில் தெலுங்கானா ராஜஸ்தான் சதீஷ்கர் மிசோரம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மூன்று இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடங்களிலும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. மேலும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் தங்களது ஆட்சியை இழந்து இருக்கிறது. இது தொடர்பாக வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழந்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்தது.

இவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தான் இழந்திருக்கிறது தவிர தங்களது வாக்கு வங்கியை இழக்கவில்லை என தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4.9 கோடி வாக்குகளை பெற்றிருக்கிறது ஆனால் பாரதிய ஜனதா 4.8 கோடி வாக்குகளை தான் பெற்றிருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மேலும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. எனினும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை பாரதிய ஜனதா கட்சி மறந்துவிடக்கூடாது எனவும் சுட்டிக்காட்டி தெரிவித்திருக்கிறார்.

Next Post

அபாய கட்டத்தில் புழல் ஏரி..!! சுற்றுச்சுவர் பகுதி இடிந்து விழுந்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு..?

Tue Dec 5 , 2023
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். மிக்ஜாம் புயல் காரணமாக இரு தினங்களாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் புழல் ஏரியின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. இதன் காரணமாக புழல் ஏரியிலிருந்து முதலில் 500 கன அடி திறக்கப்பட்டு பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு நேற்று இரவு 5,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. […]

You May Like