பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது குடும்பத்துடன் பழனி முருகன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
கடந்த 19-ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த கையோடு தமிழக பாஜக மாநில தலைவரும்,கோவை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அண்ணாமலை, கர்நாடகா, கேரளாவுக்குச் சென்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் திரும்பிய அவர் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தனது குடும்பத்துடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
மேலும், அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாஜக நிர்வாகிகள் வரவேற்று, பழனி கோயிலில் உள்ள ரோப் கார் வழியாக மலைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர், தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்த பின்னர், மலைக் கோயிலில் அமைந்துள்ள போகர் சித்தர் சன்னதிக்குச் சென்ற அவர், தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் குடும்பத்துடன் தியானம் செய்தார். ரோப் கார் வழியாகவே மலைக் கோயிலில் இருந்து கீழே இறங்கிய அவர், கார் மூலமாகக் கோவை புறப்பட்டுச் சென்றார்.