fbpx

2024 Alliance: பாஜக – தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணி இறுதி…! ஜி.கே. வாசன் அறிவிப்பு…!

பாஜக தலைமையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும் என கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். மேலும் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம் என்றும், பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், 62 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். பாரிவேந்தர் 6,83, 697 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 2,80,179 வாக்குகள் பெற்று, 4.03 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜக தலைமையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும் என கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார்கள். பாஜகவுடன் த.மா.கா கூட்டணி வைக்கிறேன். என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

BREAKING | அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Mon Feb 26 , 2024
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த ரவிக்குமாரின் மனைவி நிர்மலா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த ரவிக்குமாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் […]

You May Like