டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. ஆனால், பாஜக – ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளன.
இதை மெய்ப்பிக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி சுமார் 46 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வெறும் 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் வகிக்கிறது.
கருத்துக்கணிப்புகளை நிஜமாக்கும் வகையில் டெல்லியில் அமோக வெற்றியை நோக்கி பாஜக நகர்ந்து வருகிறது. கடந்த 3 சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவு ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.