fbpx

யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் கட்டிய பாஜக தொண்டர்… அயோத்தியில் நடைபெறும் சிறப்பு பூஜை..!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வசிக்கும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ஒருவர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பணியால் ஈர்க்கப்பட்டு அயோத்தி மாவட்டத்தில் அவருக்கு கோயில் கட்டியுள்ளார். பிரபாகர் மவுரியா என்ற அந்த நபர் இந்த கோயிலை பைசாபாத்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் பாரத்குண்ட் பகுதியில் அமைத்துள்ளார்.

இந்த இடம் ராமர் 14 வருடம் வனவாசம் செல்வதற்கு முன் அவரின் சகோதரரான பரதனிடம் விடைபெற்ற இடமாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் வில் அம்புடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சிலை காவி ஆடையில் அழகாக காட்சி அளிக்கிறார். மேலும் யோகி ஆதித்யநாத் சிலை 20 அடி உயரத்தில் ஒளிவட்டத்துடன் அமைந்துள்ளது. மேலும் பிரபாகர் மவுரியா தினமும் இரண்டு முறை முதலமைச்சர் சிலைக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறார்.

இது குறித்து பேசிய பிரபாகர் மவுரியா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மக்கள் நலப் பணிகளைச் செய்த விதத்தில், அவர் தெய்வம் போன்றே காட்சி அளிக்கிறார். அவர் செய்யும் நலப் பணிகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதனால்தான் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. “ராமர் கோயிலைக் கட்டும் அவருக்கு, நாங்கள் கோயிலை கட்டியுள்ளோம்” என்று கூறினார்.

Rupa

Next Post

மாணவிக்கு பாலியல் தொல்லை … உணவு டெலிவரிக்கு சென்றபோது சில்மிஷம்..

Tue Sep 20 , 2022
மராட்டிய மாநிலம் புனேவில் கல்லூரி மாணவிக்கு உணவு டெலிவரி செய்ய சென்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.   புனேவில் கோந்த்வா பகுதியில் தனியார் பொறியில் கல்லூரியில் படிப்பவர் 19 வயது இளம் பெண். செயலி மூலமாக இரவு உணவு ஆர்டர் செய்துள்ளார். இரவு 9 மணி அளவில் ரயீஸ் சைக் என்ற இளைஞர் உணவு டெலிவரி செய்ய வந்துள்ளார். வீட்டில் யாரும் […]

You May Like