fbpx

‘சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் பாஜக’..!! அட்டாக் செய்த அமைச்சர் சேகர்பாபு..!!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கோயில்களில் தூய்மை பணி மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில், கடந்த வாரம் மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தார். மேலும், அவர் செல்லும் ராமர் கோயில்களில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார்.

அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து கோயிலை அண்ணாமலை கழுவினர். அவருடன் பாஜக நிர்வாகிகளும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ”சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவில்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்காக ஆளுநர் துணை போய் சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டுள்ளார்” என்றார்.

Chella

Next Post

ராமர் கோவில் உட்புறத் தோற்றம் வீடியோ: "இரும்பு, ஸ்டீல் இல்லை" கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிட கலை அதிசயம்.!

Sat Jan 20 , 2024
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் ராமர் கோவில் கட்டிடத்தின் உட்புற தோற்றம் பற்றிய அழகிய வீடியோவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் பிரம்மாண்டமான ராமர் கோவிலின் பளிங்கு கற்களை கொண்டு செய்யப்பட்ட படிக்கட்டுகள் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கும்பாபிஷேகத்திற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காணொளியில் ராமர் கோவிலின் பெருமையை பறைசாற்றும் வகையில் அதன் கட்டிடக்கலை தொழில்நுட்பம் […]

You May Like