fbpx

தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது..!! அண்ணாமலை கவர்னர் ஆகிறார்..? எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி..!!

2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என எஸ்.வி.சேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் எஸ்வி சேகர் பாஜக பிரபலமாக இருந்த நிலையில், தற்போது அவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். என்றைக்கு ஜெயலலிதாவை தவறாக அண்ணாமலை பேசினாரோ அன்றே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொண்டர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட தமிழ்நாட்டில் கிடைக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், அண்ணாமலையை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து விரைவில் பாஜக மேலிடம் தூக்கிவிடும். அண்ணாமலை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக சென்று விடுவார் என்று எஸ்.வி.சேகர், தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்

Sun Aug 6 , 2023
ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் வெளியான பின்பு நீலகிரியை சேர்ந்த பொம்மனும் அவரது மனைவி பெள்ளியும் அனைவராலும் கொண்டாடப்பட்டனர். இதை தொடர்ந்து இருவரும் சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். சில மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவரும், பிரதமரும் இருவரையும் பாராட்டினர். இந்நிலையில் தமிழக வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளிக்கு, முதல் யானை பராமரிப்பாளராக […]

You May Like