fbpx

’தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவின் செயல்பாடுகள் இருக்கும்’..! – சி.டி.ரவி

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாக சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், பாஜக தலைமையை பொறுத்த வரை அதிமுகவில் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லை. அனைத்து அணிகளையும் இணைத்து வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது. பாஜகவின் சமரச பேச்சை விரும்பாததால் மோடி, அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பி விட்டார்.

’தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவின் செயல்பாடுகள் இருக்கும்’..! - சி.டி.ரவி

இந்நிலையில், அகில இந்திய பாஜக செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி கூறுகையில், “தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமல்ல அதில் உள்ள ஒவ்வொருவரிடமும் நல்ல நட்புடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். அதிமுகவில் இப்போது உள்கட்சி பிரச்சனை உள்ளது. கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் அதிகாரம் மிகுந்த இரண்டாவது தலைவராகவும் இருந்தார். தொடர்ந்து அந்த கட்சியை யார் தலைமை தாங்கி வழி நடத்தினாலும் அவர்களுடன் எங்கள் நட்பு தொடரும்.

’தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவின் செயல்பாடுகள் இருக்கும்’..! - சி.டி.ரவி

கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. தற்போது பாஜக திராவிடத்தில் அடங்கிய இந்துத்துவா, தேசிய சிந்தனை, தமிழின் பெருமை, வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது. இதை மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் திமுக பலமடையும். பாஜகவுக்கு ஆளும் திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்து இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் செயல்பாடுகளால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்” என்றார்.

Chella

Next Post

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்..!

Mon Jul 25 , 2022
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனோ தொற்று காரணமாக கடந்த 2 […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்..!

You May Like