fbpx

திருப்பூர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து…..! வட மாநில தொழிலாளி உயிரிழப்பு….!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த நிலையில் அந்த பகுதியில் இருக்கின்ற குவாரி ஒன்றில் ஒடிசா மாநிலம் பக்கராவை சேர்ந்த பபன் சிங்(46) நெல்லை மாவட்டம் செண்டமங்கலத்தை சேர்ந்த மதியழகன்(47) உள்ளிட்டோர் தொழிலாளர்களாக பணியாற்றியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் வெடி வைப்பதற்காக குழி தோண்டும் பணியில் இருவரும் ஈடுபட்டனர். அப்பொழுது ஏற்கனவே வைத்திருந்த ரெடி என்று உதித்தது பபன்சிங் மற்றும் மதியழகன் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த பவன் சிங் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மதியழகனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கோவையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆலையில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததை தொடர்ந்து பல்லடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பபன் சிங் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்

Next Post

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…..!

Fri Jun 9 , 2023
குறுவை சாகுபடிக்காக எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற ஆறுகள் மற்றும் சிறு,குறு வாய்க்கால்களின் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்வளத் துறையின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகின்றார். […]

You May Like