fbpx

வழியும் ரத்தம்..! நெற்றியில் “பெரிய காயம்” அவசர சிகிச்சை பிரிவில் மம்தா பானர்ஜி..!

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி ஆறிவிக்கப்படும் நிலை உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானெர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயங்களுடன் ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இது குறித்து பதிவில், “நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர காயமடைந்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் மம்தா பானர்ஜிக்கு எப்படி வியாபித்து ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

https://twitter.com/AITCofficial/status/1768286010264502610?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1768286010264502610%7Ctwgr%5E37acde247bbb961e2691467e72a1f9a6b4115570%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fmamata-banerjee-suffered-major-injury-says-trinamool-congress-5238911

மம்தா பானர்ஜிக்கு வீட்டில் விழுந்து அடிபட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தற்போது அவர் கொல்கத்தாவில் அரசு நடத்தி வரும் எஸ்.எஸ்.கே.எம் என்ற மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வாங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி ‛இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது. தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

Kathir

Next Post

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ரூ.2 குறைப்பு..! நாளை காலை முதல் புதிய விலை அமல்…!

Thu Mar 14 , 2024
பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில், 2021ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது. அப்போது தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, […]

You May Like