பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் துணை விரிவுரையாளராவதற்குண்டான தேர்வை எழுதி விரிவுரையாளராகலாம் என சத்தீஸ்கர் உயிர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
போஜோகுமாரி படேல் என்ற 26 வயதே நிரம்பிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் துணை விரிவுரையாளருக்கு விண்ணப்பித்திருந்தார். அனைத்து தகுதிகளும் இருந்த நிலையில் பார்வை இல்லாததால் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி நரேந்திகுமார் வியாஸ் என்பவர் விசாரித்தார். பி.எஸ்.சி. எனப்படும் பொதுப்பணித்துறை ஆணையம் மனுதாரரை இந்த செயல்முறையில் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறைக்கு துணை விரிவுரையாளராக பணியமர்த்த வேண்டும் எனவும் ஆணையிட்டு உத்தரவிட்டார்.
இன்னும் 15 நாட்களுக்குள் இந்த செயல்முறைகளை முழுமைப்படுத்தி மனுதாரருக்கு பணி ஆணை வழங்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதே போல உயர்கல்வித்துறைக்கும் பணி ஆணை வழங்க உத்தரவிடவும் ஆணையிட்டுள்ளார்.
மனுதாரர் 90 சதவீதம் பார்வையற்றவர் என்பதால் அவருக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. ஆனால் அவர் இந்த பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் அவர் பெற்றிருக்கின்றார். அனைத்து தேர்வுகளிலும் இவர் (பார்வையற்றவர் பிரிவு ) மெரிட்டில் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் , தொடர்ந்து அவருக்கு பணி ஆணை மறுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை பணி ஆணை வழங்காமல் இழுத்தடித்து வந்தது துறையின் செயல்பாடற்ற நிலையை காட்டுகின்றது. மேலும் இதன் நோக்கம் சட்டம் 2016ன் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கு எதிரானது ,இச்சட்டம் நாடாளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களுக்குரிய கண்ணியத்தையும் காப்பாற்றும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டது என நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
மனிதத்தன்மை என்பது சமவாய்ப்பு அளித்தல் , மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வளரும் திறனுக்கு நாம் அளிக்கும் மரியாதை எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.