fbpx

’ப்ளூ’ காய்ச்சல் எதிரொலி..! பள்ளிகளுக்கு விடுமுறை..! முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!

தமிழகத்தில் ’ப்ளூ’ காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் விதமாக, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், ’ப்ளூ’ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

’ப்ளூ’ காய்ச்சல் எதிரொலி..! பள்ளிகளுக்கு விடுமுறை..! முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!
கோப்புப் படம்

’ப்ளூ’ காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட வேண்டுமென்றால் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரோ அல்லது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

’ப்ளூ’ காய்ச்சல் எதிரொலி..! பள்ளிகளுக்கு விடுமுறை..! முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!

’ப்ளூ’ காய்ச்சல் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்ற இந்த சூழ்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதனைத் தடுப்பதற்குத் தேவையான மருந்துகளை பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வழங்க வேண்டும். இந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ’ப்ளூ’ காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா வழக்கு… எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் மீதும் வழக்கு….

Sun Sep 18 , 2022
கர்நாடக  மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா , அவருடைய மகன் , எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா வக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு வளர்ச்சி ஆணையம் குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கினார். இதற்காக எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் புகார் […]

You May Like