fbpx

BMW எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!… அறிவிப்பு வந்தாச்சு!… இவ்வளவு கம்மி விலையா?… சிறப்பம்சங்கள் இதோ!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் CE 02 மின்சார மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ (BMW) ஆனது கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற நிறுவனமாகும். இது ஆடம்பர வாகனங்களுக்கு பெயர் பெற்றது மற்றும் வாகனத் துறையில் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். தற்பொழுது, வளர்ந்து வரும் மின்சார வாகன உலகில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம், புதிதாக BMW CE 02 என அழைக்கப்படும் ஒரு இலகுரக (Lightweight) மின்சார மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறிய பிஎம்டபிள்யூ நிறுவனம், மின்சாரத்தினால் இயங்கக்கூடிய BMW CE 02, இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இ-ஸ்கூட்டரோ அல்லது இ-மோட்டார் சைக்கிளோ அல்ல. இது நகர்ப்புற பகுதிகளில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு மின்சார வாகனம் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இது ஓட்டுனர்களின் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு செயல்திறன் வகைகளில் வருகிறது. ஸ்டாண்டர்டு மாடல் 11 kW (15 bhp) மின் உற்பத்தி கொண்ட மோட்டார் உள்ளது. இதில் 3.9 kWh பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்ய, நிறுவனம் 1.5 kW சார்ஜரை வழங்கியுள்ளது. இது 95 kmph வேகம் வரை செல்லக்கூடும்.

மேலும், இதில் மற்றொரு மாடல் 4 kW (5 hp) மின் உற்பத்தி கொண்ட மோட்டார் உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய, நிறுவனம் 0.9 kW சார்ஜரை வழங்கியுள்ளது. இது 45 kmph வேகம் வரை செல்லக்கூடும். இந்த மின்சார வாகனத்தின் விலையானது பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை வெளியிட வாகனத்தை விட, குறைந்த விலை மின்சார இரு சக்கர வாகனமாக உள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் ரூ.7 லட்சம் ($8474 MSRP) ஆகவும், மற்றொரு மாடல் ரூ.6.2 லட்சமாகவும் ($7599 MSRP) உள்ளது. இது 3.5-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் உங்கள் பயணம் குறித்த தகவல்கள், பேட்டரி சார்ஜ் ஆகும் தகவல்களை காணலாம். மேலும், உங்கள் போனை சார்ஜ் செய்ய USB-C சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த BMW CE 02 மின்சார இரு சக்கர வாகனமானது 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

நாடே எதிர்பார்த்த 370-வது சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்ட வழக்கு...! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

Tue Jul 11 , 2023
370-வது சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் […]

You May Like