fbpx

BOB வங்கியில் வேலைவாய்ப்பு… பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Senior Officer/Officer, AVP/Manager பணிகளுக்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 13-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://bobfinancial.turbohire.co/job/publicjobs/tADmrwMt4ufx1TdgP4HfHUp2YBUtV4ngWCOB8_6syYCu_1wW9JDFqyraGjEPIlYr

Vignesh

Next Post

Certificate | ’இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ்’..!! அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

Mon Mar 11 , 2024
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2012 வரை பிற மதங்களில் இருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்கள் ஏற்கனவே பெற்ற சாதி சான்றிதழ் மாற்றப்பட்டு, முஸ்லிம் […]

You May Like