fbpx

கின்னஸ் சாதனை படைத்த Bobi உயிரிழப்பு!… உலகின் அதிக வயதான நாய் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு!

உலகிலேயே அதிக வயதுடைய நாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த Bobi உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த Bobi என்ற நாய் உலகின் மிகவம் வயதனாக நாய் என்ற உலக சாதனை படைத்தது. கின்னஸ் உலக சாதனை பட்டியலில் பெயர் பெற்ற அந்த நாயின் அதிகாரப்பூர்வ வயது 31 ஆண்டுகள் மற்றும் 163 நாட்கள் ஆகும். Purebred Rafeiro do Alentejo என்ற வகையை சேர்ந்த அந்த நாய், சிறு கால்நடைகள் மற்றும் கோழிகளை பாதுகாக்க மனிதர்களாக வளர்க்கப்படும் ஒரு நாய் இனமாகும். பொதுவாக 12 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த இன நாய்கள் உயிர்வாழுமாம். ஆனால் Bobi இயல்பை விட இரு மடங்கு அதிக ஆண்டுகள் நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து வந்துள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 1910ம் ஆண்டு பிறந்து 1939ம் ஆண்டு வரை சுமார் 29 ஆண்டுகள் வாழ்ந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Bluey என்ற நாய் தான் அதிக காலம் வாழ்ந்த நாயக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் Bobi அந்த சாதனையை முறியடித்து உலகின் வயதான நாயாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. போபி தனது வாழ்நாள் முழுவதையும் போர்ச்சுகலில் உள்ள ஒரு கிராமமான கான்கிரோஸில், கோஸ்டா என்ற நபரின் குடும்பத்துடன் தான் வாழ்ந்து வந்தது.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, அவரது உரிமையாளரால் அது ஒரு நேசமான மற்றும் சிறந்த நாய் என்று போற்றப்பட்டுள்ளது. Bobi, அதன் வாழ் நாள் முழுவதும் சுற்றிலும் உள்ள காடுகளிலும், விளைநிலங்களிலும் சங்கிலிகள் அல்லது கயிறு கட்டப்படாமல் சுதந்திரமாக சுற்றிவந்ததாக அதன் உரிமையாளர் கூறினார். பாபியின் நீண்ட ஆயுளின் ரகசியம் அது தான் என்றும் அவர் கூறியுள்ளார். Bobi வாழ்ந்த காலம் முழுவதும் ஒரு அமைதியான சூழலில் வாழ்ந்ததே அது இதனை ஆண்டுகாலம் நலமாக வாழ்ந்ததற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

Kokila

Next Post

இன்று சர்வதேச போலியோ தினம்!… முக்கியத்துவம் என்ன?

Tue Oct 24 , 2023
உலகை அச்சுறுத்திய நோய்களின் வரலாற்றில் போலியோவுக்கும் தனி இடம் உண்டு. எளிதாக பரவக்கூடிய இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. இந்த போலியோ நோய்க்கு முதன்முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க் என்பவரை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச ரோட்டரி சங்கத்தால் அக்., 24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. கார்ல் லாண்ட்ஸ்டீனியர் என்பவர் 1908ல் இந்நோயை முதலில் கண்டறிந்தார். 20ம் நுாற்றாண்டில் உலகம் ம் குழந்தைகளை […]
பெற்றோர்களே மறந்துறாதீங்க..!! தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

You May Like