fbpx

’அட்டைப் பெட்டிக்குள் குழந்தையின் உடல்’..!! ’எங்கள் மீது எந்த தவறும் இல்லை’..!! விளக்கம் கொடுத்த அமைச்சர்..!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடல் அட்டைப் பெட்டிக்குள் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரியவந்தது. பின்னர் குழந்தையின் உடல் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் தந்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் மருத்துவமனை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

"நடப்பது திராவிட மாடல் அரசு.! கோவில் விஷயத்துல அரசியல் செஞ்சா..." பாஜகவிற்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை.!

Tue Dec 12 , 2023
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். மேலும் கோவில் விஷயங்களில் அரசியல் செய்யக்கூடாது என பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கையும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பல ஆண்டுகள் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த பல […]

You May Like