fbpx

“என்னா அடி…” செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவனை தாக்கிய பாலிவுட் நடிகர்…! வெளியான வீடியோவால் பரபரப்பு.!

பாலிவுட் பிரபலமான நடிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நானா பட்டேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மீ டூ’ சர்ச்சையில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது புதிய படப்பிடிப்பு உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பின் போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நானா பட்டேகர்.

படப்பிடிப்பு தளத்திலிருந்த நானா பட்டேகருடன் செல்ஃபி எடுக்க முயன்று இருக்கிறார் ஒரு சிறுவன். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அவர் அந்த சிறுவனின் தலையில் அடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பிற்காக அருகிலிருந்த பாடிகார்ட் அந்த சிறுவனின் கழுத்தைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றுகிறார்.

இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். இது தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாலிவுட் நடிகருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kathir

Next Post

புதிதாக கட்டிய பாலத்தில் விழுந்த பள்ளம்… பொதுமக்கள் அதிர்ச்சி.! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.?

Wed Nov 15 , 2023
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்றில் பள்ளம் விழுந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இங்கு புதியதாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் பாலம் சேதமடைந்து பள்ளம் […]

You May Like