நாமக்கல் தொகுதி எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொட்டணம் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட புகாருக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். எம்பி வீட்டில் யாரும் பெட்ரோல் குண்டு வீசவில்லை என்றும் ஏசி பழுதால் தீவிபத்து நிகழ்ந்ததாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். வெடிசத்தம் கேட்டதாக, எம்பியின் சகோதரர் அருள்மணி கூறிய நிலையில், எஸ்பி ராஜேஷ்கண்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.