கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்தது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை உரிமையாளரும், திமுக பிரமுகருமான டாக்டர் நவின்குமார், சிப்காட் போலீசில் புகார் செய்தார். சிறிது நேரத்தில், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் அவரது குழுவினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மருத்துவமனை வளாகத்தில் சோதனை நடத்தினர்.
சோதனைக்கு பின் இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்றும், எந்தவொரு வெடிமருந்தும் இருந்ததற்கான ஆதாரத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை,” என்று இன்ஸ்பெக்டர் செய்தியாளர்களிடம் கூறினார். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு குழந்தைகள் மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல டெல்லியில் உள்ள சாச்சா நேரு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மருத்துவமனை வளாகத்தில் சோதனை நடத்தினர்.