fbpx

தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பதறிய காவல்துறை..!! நடந்தது என்ன..?

கேரளா மாநில தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்கள் அவசர காலங்களின் போது போலீஸாரை தொடர்பு கொள்ள 112 என்ற அவசரகால சேவை திட்டம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் எவ்விதமான அவசர சேவையாக இருந்தாலும், பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். உரிய துறைக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு சேவைகள் உடனடியாக வழங்கப்படும்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் குண்டு வெடிக்கும் என, ஒரு அவசர செய்தி அம்மாநில காவல்துறை தலைமையகத்திற்கு 112 எண்ணிற்கு அனுப்பப்பட்டது. தகவல் அறிந்தவுடன் போலீஸார் உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் மிரட்டல் வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்த நபர் பொளியூர் உச்சக்கடா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நிலையில், அவரை அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, 12 வயது சிறுவன் ஒருவன் இதே எண்ணில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

SBI வங்கியில் வேலைவாய்ப்பு…! இன்றே கடைசி நாள்... உடனே விண்ணப்பிக்கவும்…!

Fri Nov 10 , 2023
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Specialist Cadre Officers (Business Analyst) பணிகளுக்கு 1 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு ஏற்றவாறு மாத ஊதியம் […]

You May Like