குழந்தைப்பருவ சர்கோமா என்பது, குழந்தைகளின் எலும்புகளிலும் மற்றும் மென்திசுக்களிலும் உருவாகின்ற அரிதான புற்றுநோய்களின் ஒரு தொகுப்பை குறிக்கிறது. எலும்பு புற்றுநோயைப் பொறுத்தவரை ஆஸ்ட்டியோ சர்கோமா என அழைக்கப்படும் புற்றுநோயே குழந்தைப்பருவ நோயாளிகளிடம் மிக அதிகமாக கண்டறியப்படும் புற்றுநோய் வகையாக இருக்கிறது. இந்த தீவிரமான புற்று, கைகள் மற்றும் கால்கள் போன்ற நீண்ட எலும்புகளின் முனைகளுக்கு அருகிலுள்ள எலும்பு வளர்ச்சியடையும் பகுதிகளில் வழக்கமாக உருவாகிறது.
ஆஸ்டியோசர்கோமா என்பதற்கும் கூடுதலாக எலும்பு புற்றுநோயின் பிற வகைகளும் குழந்தைகளை தாக்கக்கூடும்; எனினும், இந்த பாதிப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. ஈவிங் சர்கோமா, குருத்தெலும்புப்புற்று மற்றும் தீங்கான நார்த்திசு சார்ந்த திசுசெல் புற்றுநோய் ஆகியவையும் இவைகளுள் உள்ளடங்கும். இந்த ஒவ்வொரு வகை புற்றுநோயும் அதன் தனிப்பட்ட பண்பியல்புகளையும், சிகிச்சை நெறிமுறைகளையும் மற்றும் நோய் நீக்க கணிப்புகளையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் பொருத்தமான சிகிச்சை அணுகுமுறையை தீர்மானிப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக செய்யப்படும் நோய்க்கண்டறிதல் முடிவு மிக மிக முக்கியம்.
குழந்தைகளது எலும்புகள் இன்னும் வளர்ச்சியடைந்து பெரிதாகக்கூடியவை என்பதால், அறுவைசிகிச்சை இடையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதை அது அதிக சிக்கலானதாக ஆக்குகிறது. கை, கால் உறுப்புகளின் இயக்கம் மற்றும் நீண்டகால அளவு வளர்ச்சி மீது அறுவைசிகிச்சையினால் ஏற்பட சாத்தியமுள்ள தாக்கம் குறித்து கவனமாக பரிசீலிப்பது அவசியம்.
குழந்தைப்பருவம் என்பது, ஒரு நபரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் மிக முக்கியமான காலமாகும். இளவயதில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவது, அந்த இளநோயாளிகள் மீதும் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதும் மிக ஆழமான, உணர்வுரீதியிலான பாதிப்பை கொண்டிருக்கும். எனவே, புற்றுநோய்க்கான சிகிச்சைப்பயணம் முழுவதிலும் சமூக உளவியல் சார்ந்த ஆதரவும், ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்படுவது இன்றியமையாதது.
எலும்பு புற்றுநோய் உட்பட, குழந்தைப்பருவ சர்கோமா, வயதுவந்த நபர்களுக்கு வரும் பிற புற்றுநோய்களோடு ஒப்பிடுகையில் பிற உறுப்புகளுக்கு இடம்மாறி பரவும் போக்கை அதிகளவில் கொண்டிருக்கிறது. பிற உறுப்புகளுக்கு பரவுவதை கண்டறிவதற்கும் மற்றும் சிகிச்சை மூலம் அவற்றை நிர்வகிப்பதற்கும் நெருக்கமான கண்காணிப்பும் மற்றும் பொருத்தமான இமேஜிங் தொழில்நுட்ப உத்திகளும் மிகவும் அவசியம்.