fbpx

தீபாவளி பண்டிகைக்கு போனஸ் கட்டாயமா..? சட்டம் சொல்வது என்ன..? இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

நாட்டில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும், அதை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வகையான வாய்ப்புகளையும் உருவாக்கும் களமாக இந்த திருநாள் திகழ்கிறது. அந்த வகையில், போனஸ் என்பது உழைக்கும் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. எனவே, அதுகுறித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகைக்கு போனஸ் கட்டாயமா..? சட்டம் சொல்வது என்ன..? இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

போனஸ் என்றால் என்ன..? எதற்காக..?

ஒரு தலைமுறையால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்றை, இன்று ஒரு இயந்திரம் ஒரே நாளில் செய்து குவிக்கும் அளவுக்கு இன்றைய மூலதனத்தின் சக்தி உள்ளது. ஆனாலும், தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத்துவம் குறையாது. ஏனெனில், உழைப்பு என்பது தனிமனித நடவடிக்கை அல்ல. அதனிடம் சமூகப் பண்பு உள்ளது. உழைப்பின் வரலாறு தான் மனித சமூகத்தின் வரலாறு என்ற கூற்றும் உண்டு. எனவே, முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, உழைப்பைச் செலுத்தும் தொழிலாளிகளுக்கும் பங்கு தர வேண்டும் என்கிற நோக்கில் 1965ஆம் (Payment of Bonus Act, 1965) ஆண்டு தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு போனஸ் கட்டாயமா..? சட்டம் சொல்வது என்ன..? இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

யாருக்கு போனஸ்..?

இச்சட்டத்தின் கீழ், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலார்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் (factory and every establishment) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு லாபத்தின் அடிப்படையில் கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டும். எனவே, 20-க்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் போன்ற தொழில் நிறுவனங்களில் நீங்கள் பணிபுரிந்தால் உங்களுக்கு கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டும்.

போனஸ் பெறுவதற்கான தகுதி…?

முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு போனஸ் வழங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. தற்போதைய திருத்த சட்டத்தின் படி கட்டணம், போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து மாதத்திற்கு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உங்களது மாதச் சம்பளம் ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு போனஸ் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

போனஸ் தொகை எவ்வளவு..?

போனஸ் கணக்கீட்டிற்கு, ஊழியர்களின் ஒருமாத சம்பளம் ரூ.7,000 (அல்லது அந்ததந்த தொழில்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச போனஸ் தொகையாக, ஊழியரின் ஊதியத்தில் 20% வரை வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச தொகையாக 8% வரை வழங்கப்பட வேண்டும்.

தீபாவளிக்கு கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டுமா…?

போனஸ் வழங்கல் சட்டத்தின் படி, ஒரு நிதியாண்டின் முடிவில் இருந்து, 8 மாதங்களுக்குள் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும். தீபாவளிக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தில் சொல்லப்படவில்லை, இருந்தாலும், மரபின் படி பெரும்பாலான தனியார் நிறுவங்களும், அரசாங்களும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே போனஸ் தொகையை வழங்குகின்றன.

Chella

Next Post

தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு..!! வலுக்கும் கோரிக்கை

Tue Oct 18 , 2022
தீபாவளிக்கு அடுத்த நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த […]

You May Like