fbpx

இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்!… தாம்பரம் – நாகர்கோவில் இடையே தீபாவளி சிறப்பு ரயில்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மேலும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படும் எனவும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 2 இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

நோட்...! இவர்களுக்கு மட்டும் 12-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி கிடையாது...! பள்ளி கல்வித்துறை அதிரடி முடிவு...!

Thu Nov 2 , 2023
நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்; 2023-24ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 2023, மார்ச் மாதம் தேர்வு எழுதி 11-ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே தயார் செய்யப்பட […]

You May Like