ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பாவில் சர்வதேச எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்தவர் மீது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில், புதன்கிழமை இரவு 8.30 மணியளவில், BSF துருப்புக்கள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை 125 BN இன் எச்சரிக்கையை கவனித்தனர். அதனையடுத்து பாகிஸ்தானை சேர்ந்தவர், இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முயன்றது தெரியவந்ததையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்,
அதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த ஊடுருவல்காரர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தீவிரம் காட்டியுள்ளார். இதனையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஊடுருவ முயன்ற அந்த பாககிஸ்தான் நபர் மீது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எல்லை அவுட்போஸ்ட் ரீகல் அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும், முழுமையான தேடுதல் நடவடிக்கைக்காக வலுவூட்டல் பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சமீபகாலமாக மோதல்கள் அதிகரித்து வருகிறது. முன்னதாக ஏப்ரல் 26 அன்று, பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் ஒரே இரவில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மற்றொரு சமீபத்திய சம்பவத்தில், ஏப்ரல் 28 அன்று, பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, பயங்கரவாதிகளால் ஒரு கிராமத் தற்காப்புக் காவலர் (VDG) கொல்லப்பட்டார். உத்தம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் உள்ள சோச்ரு காலா உயரத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர்.