fbpx

பிறந்தது ‘2025’..!! இந்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய விநாயகரை இப்படி வழிபடுங்கள்..!!

ஜனவரி 1ஆம் தேதியான இன்று 2025 பிறந்துள்ளது. 2024இல் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, 2025இல் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படி நினைக்கும் பட்சத்தில் 2025 ஜனவரி 1ஆம் தேதியான இன்று எந்த முறையில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நமக்கு 2025 சிறப்பானதாக அமையும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழர்கள் பண்பாட்டில் சித்திரை 1ஆம் தேதி வருட பிறப்பாக கணக்கிடப்படுகிறது. இருப்பினும், ஜனவரி 1ஆம் தேதியும் அனைவரும் வழிபாடுகளை மேற்கொள்வார்கள். 2025ஆம் ஆண்டு சிறப்பான வருடமாக அமைவதற்கு குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு முழு முதற்கடவுளான விநாயக பெருமானையும் நாம் வழிபாடு செய்தால், அந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும்.

இந்த வழிபாட்டிற்கு அபிஷேகம் செய்ய சந்தன கட்டை வேண்டும். நம்முடைய கையால் சந்தன கட்டையை பன்னீர் ஊற்றி நன்றாக அரைத்து அதனுடன் ஜவ்வாது, மரிக்கொழுந்து, குங்குமப்பூவை சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி அரைத்த சந்தனத்தை ஒரு உருண்டையாக்கி அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடி விநாயகரிடம் சென்று அவருக்கு இந்த சந்தனத்தை பயன்படுத்தி தங்களுடைய கைகளாலேயே அபிஷேகம் செய்ய வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இதோடு அன்றைய தினம் மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று தங்களால் இயன்ற அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதால், வாழ்க்கையில் இருக்கக் கூடிய இருள் அனைத்தையும் நீக்கி ஒளிமயமான எதிர்காலத்தை சிவபெருமான் அருள்வார்.

அன்றைய தினத்தில் முடிந்த அளவுக்கு அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அதே போல் மஞ்சள், சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கொண்டு இந்த வழிபாட்டை செய்தால், அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த எளிமையான வழிபாட்டை ஜனவரி 1ஆம் தேதியான இன்று முழுமனதோடு செய்து 2025ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக மாற்றிக் கொள்வோம்.

Read More : ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு..!! காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!

English Summary

In this post, we will see how we can make 2025 auspicious for us by anointing and worshiping Lord Ganesha today, January 1, 2025.

Chella

Next Post

செவ்வாழை பழத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!! இதை படித்தால் இனி தினமும் சாப்பிடுவீங்க..!!

Wed Jan 1 , 2025
If we want to increase the hemoglobin level in our body, we should eat a banana every day.

You May Like