fbpx

கடன் வாங்கியவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தக்கூடாது.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்..

கடன் வாங்கியவர்களிடம் கடன் வசூலிப்பது குறித்த புதிய உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது..

கடன் வசூலிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும், அவை முறையாக பின்பற்றப்படாததால் நேற்று கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்தது.. அந்த உத்தரவில் “ கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை மீறி வருவதாக தெரிய வந்துள்ளது..

வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய் மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.. எந்த வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது.. தொலைபேசியில் மிரட்டல் விடுக்கக்கூடாது. கடன் தவணையை செலுத்த வேண்டும் என்று இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூடாது.. “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த புதிய உத்தரவுகள் அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறு சீரமைப்பு நிறுவனங்கள் அகில இந்திய நிதி ஆகியவற்றுக்கு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது..

Maha

Next Post

#Covid- 19 : நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தெரியுமா...? வெளியான புதிய விவரம்....!

Sat Aug 13 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 15,815 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 68 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,431 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

You May Like