fbpx

”தமிழ்நாட்டில் 2 கட்சிகளுக்குமே மக்களை பற்றிய அக்கறை இல்லை”..!! சென்னை ஐகோர்ட் காட்டம்..!!

‘தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கட்சியினருக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை’ என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓபிஎஸ் தரப்பினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 300-க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 100 பேருக்கு மேல் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டினார். ‘கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி உள்ளனர். அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது’ என்று குறிப்பிட்டார். மேலும், ‘தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை. அவர்களுடைய சொந்தக் கட்சியை பற்றி மட்டும்தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா?’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்

மேலும், ‘எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல் துறையினர்தான் பணியில் ஈடுபடுகிறார்கள். தேவையில்லாமல் காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப்படுகின்றனர்’ என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், ‘இந்த வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Read More : மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லையா..? விண்ணப்பிக்க மீண்டும் ஓர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

‘Both parties in Tamil Nadu do not care about the people’, Madras High Court expressed anguish.

Chella

Next Post

மாணவிகளுக்கு மது கொடுத்த விவகாரம்.. அறையிலிருந்து அலறி அடித்து ஓடி வந்த மாணவிகள்..!! - சிக்கிய சிசிடிவி

Fri Nov 15 , 2024
The court has ordered to grant bail while teacher was arrested in the case of sexually harassing schoolgirls near Tiruchendur.

You May Like