fbpx

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன்பலி…

ஈரோடு மாவட்டத்தில்  வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட அஸ்திவாரக் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் . இவருக்கு புஷ்பராஜ் (13), அபினேஷ் (6) என்ற இரு மகன்கள் ஹர்த்திகா (3) என்று மகளும் உள்ளனர். அபினேஷ் என்ற சிறுவன் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்றிருந்தான். நேற்று மாலை விளையாடச் சென்ற சிறுவன் அபினேஷ் இரவு 8 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.

எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் அருகில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று தேடிப்பார்த்தபோது இறந்த நிலையில் கட்டிடத்திற்கு தோண்டப்பட்ட குழியில் கிடந்தான்.

7 அடிக்கு தோண்டப்பட்ட குழியில் 5 வரை தண்ணீர் இருந்துள்ளது. பள்ளத்தின் அருகே அமர்ந்திருந்த சிறுவன் எழுந்திருக்கும் போது குழியில் விழுந்துள்ளான். மழைநீர் தேங்கி இருந்ததால் சிறுவன் அந்த குழியில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கின்றான்.

சிறுவனை மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது 7 மணி அளவில் சிறுவன் அங்கு விளையாடிக் கொண்டிருப்பதும். பள்ளத்தின் அருகே உட்கார்ந்திருந்தபோது அதில் தவறி விழுந்ததும் தெரியவந்தது.

Next Post

போதை தலைக்கேறியதால் சிறுமியிடம் இளைஞர் செய்த தகாத காரியம்; அடித்து துவைத்த பொதுமக்கள்..!!

Tue Sep 20 , 2022
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் ரோட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளஞரை சரமாரியாக அடித்து துவைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராயப்புரம் காவல்துறையினர் […]

You May Like