fbpx

ரீல்ஸ் மோகத்தால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்; நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்..

தற்போது உள்ள காலகட்டத்தில், காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்குவது வரை ரீல்ஸ் எடுத்து பதிவேற்றம் செய்கின்றனர். இவ்வளவு ஏன், கழிவறைக்கு செல்வதை கூட அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். கண்ணில் காண்பதை எல்லாம் வீடியோ எடுத்து போட்டு லைக் வாங்குகின்றனர். ஒரு லைக், ஷேருக்காக ஒரு சிலர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர். இந்த ரீல்ஸ் மோகம் சிறுவர்கள், பெரியவர்கள் ஏன், முதியவர்களை கூட விட்டு வைக்கவில்லை. ஆனால் குறிப்பாக, ஒரு லைக்குகாக வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் செய்யும் காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆம், அந்த வகையில் வாலிபர் ஒருவர் ரீல்ஸ் எடுக்கும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

14 வயதான ஃபர்மான் என்ற சிறுவன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜஹாங்கிராபாத்தில் உள்ள தேரா தௌலத்பூரில் வசித்து வருகிறார். ரீல்ஸ் மோகத்தில் இருந்த இவர், ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க நினைத்துள்ளார். அதன் படி, இவர் தனது செல்போனுடன் தண்டவாளத்தை நெருங்கியுள்ளார். அப்போது, ​​வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஃபர்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து ஃபர்மானின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், ஃபர்மான் தனது நண்பர்களான ஷுஐப், நாதிர் மற்றும் சமீர் ஆகியோருடன் அருகில் ஒரு ஊர்வலத்தைக் காணச் சென்றுள்ளார். செல்லும் வழியில், தாமேதர்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயற்சித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Maha

Next Post

காரில் வந்த மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்த நபர்…! முட்டிமோதிய மக்கள்.., சாலை எங்கும் பறந்த ரூபாய் நோட்டுகள்…

Tue Oct 3 , 2023
மக்கள் வித்தியாசமாக செய்யும் ஏதேனும் ஒரு செயல்கள் விடியோக்கள் மூலம் இணையங்களில் உலா வருவது வழக்கம். தற்போது அது போல ஒரு வீடியோ உலா வருகிறது. அந்த வீடியோவில் மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்த நபர் ஒருவர், ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசுவதை போல் காட்சிகள் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மணி ஹெய்ஸ்ட்முகமூடியை அணிந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு, அந்த காரின் மீது ஏறி […]

You May Like