திருப்பூர் மாவட்டம்.பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (26) இவர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு இளம் பெண்ணை ஷாஜகான் காதலித்ததாக தெரிகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், இவர்களுடைய காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இத்தகைய நிலையில்தான் அந்தப் பெண் ஷாஜகான் உடன் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. பலமுறை ஷாஜகான் தன்னுடைய காதலியை செல்போன் மூலமாக அழைத்த போதும் அவர் சரியான முறையில் அவருடன் பேசவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் கொண்ட ஷாஜகான், காதலியை வேறு ஒரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு இருவரும் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அந்த இளம் பெண், இது தொடர்பாக திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஷாஜகானை கைது செய்தனர்.