fbpx

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலன் வெட்டிப் படுகொலை..!! பெண்ணின் தந்தை வெறிச்செயல்..!!

கோவையில் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற சென்ற காதலனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு பிரசாந்த் தனது நண்பருடன் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக குடிபோதையில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் பிரசாந்தை மகாதேவன் மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் ஆகியோர் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாதேவன் மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இதை உடனே செய்யுங்கள்…..! ஆளும் தரப்புக்கு முக்கிய கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிச்சாமி…..!

Mon Jun 5 , 2023
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அறிவுரை வழங்கவும், மாணவர்களை கட்டுப்படுத்தவும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல கற்பித்தலுக்கு 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் முடிவடைந்த […]

You May Like