fbpx

19 வயது மாணவியை கர்ப்பமாக்கிய காதலன்..!! திருமணத்திற்கு வற்புறுத்தியதால் நடந்த கொடூரம்..!!

19 வயது மாணவி, தனது காதலனைத் திருமணம் செய்துக் கொள்ளக் கூறி வற்புறுத்தி வந்ததால் 7 மாத கர்ப்பிணியான இளம்பெண்ணை காதலன் கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோனி என்ற 19 வயது இளம்பெண்ணை அவரது காதலன் சஞ்சு என்கிற சலீம், இரண்டு பேருடன் சேர்ந்துக் கொடூரமாக கொலைச் செய்திருக்கிறார். கொலைச் செய்யப்பட்ட இளம்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தன்னை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளக் கோரி சலீமை வற்புறுத்தி வந்ததால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் சலீம் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3-வது சந்தேக நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”சோனி தனது காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக காதலர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து பேசும் போது சலீம் சோனியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதை சோனி மறுத்து விட்டார். சோனி அடிக்கடி யாரிடமாவது செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை கவனித்ததாக அவரது பெற்றோர் போலீசாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை சோனி சலீமை சந்திப்பதற்காக தனது வீட்டில் இருந்து அவளுக்கு சொந்தமான சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றபோது இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விசாரணையில், சலீம் மேலும் இருவரின் உதவியுடன், சோனியை ஹரியானாவின் ரோஹ்தக் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் அவரை கொலை செய்து உடலைப் புதைத்ததாகவும் கூறப்படுகிறது. சோனி, இன்ஸ்டாகிராமில் 6,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார். இன்ஸ்டா பக்கங்களில் அவர் சலீமுடன் புகைப்படங்களையும், வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக தளங்களில் சோனியின் பல படங்களையும் சலீம் வெளியிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமி..!! நோட்டமிட்ட மர்ம நபர்..!! திடீரென உள்ளே புகுந்து பாலியல் பலாத்காரம்..!!

English Summary

A 19-year-old student, who forced her to marry her boyfriend, killed a 7-month-old pregnant girl.

Chella

Next Post

இரவில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! காலையில் கட்டாயம் இது இருக்கணும்..!!

Sun Oct 27 , 2024
Do you think you should avoid eating too much at night? So follow these 5 things.

You May Like