fbpx

மூளைச்சாவு அடைந்த பெண் இதயம் சென்னைக்கு பறந்தது… வேலூர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உறுப்பு தானம்…

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது இதயம் வேலூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலூரை அடுத்த திருவண்ணாமலை  மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் . இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார் இவரது மனைவி கலைச்செல்வி (43) . தனது பெண் குழந்தைகள் இரண்டு பேருடன் வசித்து வந்தார். கடந்த 1ம் தேதி அதே பகுதியில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில்  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை  பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார்.

உடனடியாக உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். இதையடுத்து கலைச்செல்வியின் இதயம் , கல்லீரல் , கணகள் , சிறுநீரகம் உள்ளட்ட உறுப்புகளை தானமாக பெறப்பட்டது.

இதையடுத்து  அவரது இதயம் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. எனவே அதை சென்னைக்கு கொண்டுசென்றனர். கண்கள் , சிறுநீரகம் , கல்லீரல் உள்ளிட்டவற்றையும் பிற மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கினர்.

இன்று காலை ஆம்புலன்சில் அதிவிரைவாக இதயம் பறந்தது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு இதயம் வழங்கப்பட உள்ளது.

Next Post

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம்..! ஆட்டோவில் பிறந்த குழந்தை..! பரபரப்பு சம்பவம்..!

Sun Sep 4 , 2022
17 வயது சிறுமி குழந்தை பிரசவித்த சம்பவம் தொடர்பாக பட்டதாரி இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு‌ செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்தாண்டு 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் […]

You May Like