fbpx

’Brain-Eating Amoeba’..!! மனித மூளையை உண்ணும் கொடூர நோய்..!! தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!!

தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபா நோயால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக, மூளையை உண்ணும் அமீபா (Brain-Eating Amoeba) எனும் அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கி இருந்து விட்டு, கடந்த 10ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய 50 வயது நபர் மறுநாளே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, தலைவலி, காய்ச்சல், வாந்தி, பேச்சு மந்தம் மற்றும் கழுத்து விறைப்பு போன்ற மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், கடந்த 21ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

’Brain-Eating Amoeba’..!! மனித மூளையை உண்ணும் கொடூர நோய்..!! தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!!

இதுதொடர்பாக, தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தாய்லாந்து சென்று நாடு திரும்பிய அந்த 50 வயது நபர் மூளையை உண்ணும் அமீபா எனும் அரியவகை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. Naegleria fowleri என்பது உலகெங்கிலும் உள்ள சூடான நன்னீர் ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு அமீபா ஆகும். இந்த தொற்றானது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதேநேரம், பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு வேண்டும்.

’Brain-Eating Amoeba’..!! மனித மூளையை உண்ணும் கொடூர நோய்..!! தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!!

உயிர்போக 97% வாய்ப்பு

அமெரிக்கா, இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கடந்த 2018ஆம் ஆண்டு வரையில் மூளையை உண்ணும் அமீபா எனும் அரிய வகை நோயால் 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்த நோயால் இதுவரை 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். மூளையை உண்ணும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 97% பேர் பலியாகி விடுகின்றனர். இந்த நோய்க்கான, எதிராக பயனுள்ள சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

Chella

Next Post

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம்... விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு?

Tue Dec 27 , 2022
2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 9ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்குகிவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மற்றம் செய்யப்பட்டது, மேலும் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பொங்கல் பண்டிகை முதல்..!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!! வங்கிக் கணக்கு பணிகள் தீவிரம்..!!

You May Like