fbpx

3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை!… தடயங்கள் மூலம் உறுதியான ஆச்சரியம்!… தொல்லியல் துறையினர் கண்டுபிடிப்பு!

இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த ஒருவரின் உடலை ஆய்வு செய்தபோது, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சகோதரர்களில் ஒருவரது மண்டை ஓடு, அதன் கீழே இருக்கும் திசுக்கள் சேதமடையாமல் உடைத்தெடுக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாகவும், இந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் மண்டை ஓட்டு அறுவை சிகிச்சைகள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பண்டைய நகரமான டெல் மெகிடோவில் உள்ள ஒரு கல்லறையில் அகழ்வாராய்ச்சியின் போது கிமு 1550 முதல் கிமு 1450 வரையிலான வெண்கல காலத்தில் வாழ்ந்த சகோதரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் அதனடிப்படையில், மூத்த சகோதரர் வயது 20 – 40-க்குள்ளாக இருக்கலாம். மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை செய்தற்கான தடயங்கள் இருந்தன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மேலும், மண்டை ஓட்டில் 1.2 இன்ச் அளவில் ஓட்டை இருந்ததாகவும், அதாவது மண்டை ஓட்டில் ஒரு சதுரமான எலும்புப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மூளை தொடர்பான அறுவை சிகிச்சைகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகளவில் பரவலாக செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறினர்.

முன்னதாக, ஒரு மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதன் வாழ்க்கை முறை மட்டுமே கண்டுபிடிக்கப்படும் நிலையில், தற்போது, இந்த மனித எலும்பு மூலம் மூளை அறுவை சிகிச்சை என்ற அரிய நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொல்லியல் துறை வரலாற்றில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

8,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்.. கலக்கத்தில் ஊழியர்கள்..

Sat Feb 25 , 2023
எரிக்சன் நிறுவனம் உலகளவில் 8,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் ஜூம், யாஹூ, […]

You May Like