fbpx

வரும் 25ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

முதலமைச்சரின் உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஏழை குழந்தைகள் பயன் பெறும் வகையில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் துவங்கி வைத்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயின்று வரும் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டம் குறித்து தமிழக அரசு தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள்.

ரூ.404 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ரூ.12.71 செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காலை தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Chella

Next Post

கொளுத்தும் வெயில்..!! 20 நிமிடங்களில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்..!! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்..!!

Sun Aug 6 , 2023
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் அதிகளவில் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால, வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர். மாலை வெயில் குறைந்த பிறகே விளையாட செல்கின்றனர். தென்மேற்கு […]

You May Like