fbpx

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தனியார் வசம் ஒப்படைப்பு..!! தீர்மானம் நிறைவேற்றம்..!!

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்து வரும் நிலையில், இந்த மாமன்ற கூட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஓராண்டு கொடுப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

சென்னையில் மட்டும் இதற்காக ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் அடிப்படையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் போது முறையாக எந்தவிதமான சிரமமும் இல்லாமல் திட்டம் சரியாக நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் ஏன் தனியாருக்கு கொடுக்க வேண்டும், இது மாநகராட்சி நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு மேயர் பிரியா கூறுகையில், சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். எனவே, சென்னையில் அதுபோன்றுதான் தனியாருக்கு கொடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இன்று தீர்மானத்திற்கு மாமன்ற கூட்டத்தில் பெருமளவுக்கு ஆதரவு இருந்ததன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

மக்களே உஷார்..!! டெங்கு காய்ச்சலால் குழந்தை உள்பட இருவர் பலி..!! மதுரையில் அதிர்ச்சி..!!

Wed Nov 29 , 2023
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து மதுரை மாநகரம் முழுவதும் தொற்று நோய், வைரஸ் காய்ச்சல் என பரவி வருகிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, மதுரையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலின் காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார். இவர் வெளிநாட்டில் கப்பல் ஊழியராக […]

You May Like