தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
BREAKING | பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :
* சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
* வேளாண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
* வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் இரசாயன மருந்துகளை குறைத்தல்.
* கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
* 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
* எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
* ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்.
* 10 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.
* 10 அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தோட்டக்கலை விற்பனை மையங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.
* உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்களை அறிமுகம் செய்து பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா மேம்படுத்தப்படும்.
* மூலிகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு.
* பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க தலா ரூ.1 லட்சம் வீதம் 100 பேருக்கு மானியம்.