கடந்த 2006ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தினசரி ஊதியம் தற்போது ரூ.290ஆக உள்ள நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.319ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.1,129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்த்தப்படு என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.