வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இங்கு இன்று மதியம் கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளதுஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணியளவில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
ஹவாயில் உள்ள NWS பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிக்கையின் படி “வனுவாட்டுவின் சில கடற்கரைகளில் அலை மட்டத்திலிருந்து 0.3 முதல் ஒரு மீட்டர் வரை சுனாமி அலைகள் எழக்கூடும்” என்று தெரிவித்திருக்கிறது. மேலும் நியூ கலிடோனியா மற்றும் சாலமன் தீவுகல் உள்ள பகுதிகளில் 0.3 மீட்டருக்கும் குறைவான அலைகள் எழக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வனுவாட்டு பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” இன் ஒரு பகுதியாகும், அங்கு டெக்டோனிக் தகடுகள் மோதுவதால் இப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது. வனுவாட்டுக்கு வடக்கே அருகிலுள்ள தீவு நாடான சாலமன் தீவுகளில் நவம்பர் மாதத்தில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது வனுவாட்டு மற்றும் அருகிலுள்ள பப்புவா நியூ கினியாவின் கடலோரப் பகுதிகளில் 30 சென்டிமீட்டர்கள் (12 அங்குலம்) வரை சுனாமி அலைகளுக்கு எச்சரிக்கையாக விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.