fbpx

#BREAKING | தமிழகத்தை உலுக்கும் சம்பவம்..!! மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பரிதாப பலி..!! இருவர் கவலைக்கிடம்..!!

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த லவ் டேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுரை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பிஜ்ஜால் என்பவர் காந்தி நகரில் வீடு கட்டி வருகிறார். இந்த இடமானது நிலச்சரிவு அபாயம் மிக்க இடம் என பலமுறை அங்கிருப்பவர்கள் புகார் கூறிய நிலையில், அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், காலையில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென்று அங்கிருந்த தடுப்புச் சுவரானது முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது.

அந்த சமயத்தில் 8 பெண்கள் பணிபுரிந்துள்ளனர். அந்த 8 பேரும் மண்ணிற்குள் புதைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஜேசிபி இந்திரங்கள், அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் புதைந்த 8 நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட 8 பேரில் 5 பேர் பலியாகி உள்ளதாகவும், மேலும் இருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒருவர் மட்டும் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் ஷகிலா, சங்கீதா, பாக்கியா, உமா, முத்துலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

Chella

Next Post

பாராளுமன்றத் தேர்தல் 2024: "பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி ..?.." அமித்ஷா, சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு.!

Wed Feb 7 , 2024
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி 2019 தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொண்டது. ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என கூறி தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உருவாகி இருக்கிறது. […]

You May Like