fbpx

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது…..! வெளியானது தேதி…..!

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர். இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு மே மாதம் 22ஆம் தேதி உடன் முடிவுற்றது.

ஒட்டுமொத்தமாக 2,99,558 மாணவர்கள் பதிவு செய்திருக்கின்ற நிலையில், 2,44,104 மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கட்டணமும் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இருக்கின்ற 163 அரசு கலை கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் இருக்கிறது. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 75,811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள இடங்களுக்கு இன்னும் சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் எனவும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி ஜூலை மாதம் 3ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Next Post

அன்றாடம் யோகா செய்வதின் முக்கியம் - சர்வதேச யோகா தினம்

Wed Jun 21 , 2023
இன்றைய பரபரப்பான அவசர காலகட்டத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது மிக மிக கவனிக்கப்பட வேண்டிய தேவையாக உள்ளது. எல்லாவற்றிலும் ஒரு அவசரமும் பதற்றமும் இருக்கும் நிலையில், நம்மால் நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தினை திறம்பட கையாள முடியாமல் போகிறது. ஆனால் அவற்றை காப்பதன்மூலம் மட்டுமே, நாம் அன்றாட வாழ்க்கையினை திறம்பட வாழ முடியும்.யோகா தியானப் பயிற்சியின் மூலம் நம் உடல் மற்றும் மனதினை நம் கட்டுப்பாட்டுக்குள் […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..! இனி 20 நிமிடங்கள் வரை யோகா பயிற்சி..!

You May Like