fbpx

#Breaking..!! வீடு, நிலம் வாங்குவோர் கவனத்திற்கு..!! தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் பல மடங்கு உயர்வு..!!

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது, கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதித்துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன் டங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.

இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத் தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது.

Chella

Next Post

கயிற்றை இழுத்தால் தலை துண்டாகி நெருப்பில் விழும்..!! சினிமாவை மிஞ்சிய நரபலி சம்பவம்..!!

Mon Apr 17 , 2023
குஜராத் மாநிலத்திற்கு உட்பட்ட வின்ச்சியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமுபாய். இவரது மனைவி ஹன்சாபென். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் தங்களது வயல் பகுதியில் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தம்பதிகள் தங்களது தலையை தாங்களே வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். மேலும், அவர்களது வீட்டிற்குள் நரபலி சடங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு […]

You May Like