fbpx

Breaking Bad தொடர் நடிகர் வால்டர் வைட்டின் உள்ளாடை ஏலம்!… விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஏலத்தில் Breaking Bad என்ற வெப் சீரீஸின் முக்கிய கதாபாத்திரமான வால்டர் வைட் அணிந்திருந்த வெள்ளை நிற உள்ளாடை 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏலம் விடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஹாலிவுட் வெப் சீரீஸான பிரேக்கிங் பேட் தொடர் உலக புகழ்பெற்றது. இந்த தொடரில் பள்ளியில் வேதியல் ஆசிரியராக இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன் வால்டர் வைட், தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிகிறார். இவருக்கு பதின் பருவத்தில் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளி மகன், மற்றும் நிறைமாத கர்ப்பிணியான மனைவி இருப்பார்கள். சிகிச்சை, மனைவி குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என, அவரிடம் போதிய பணம் இல்லை. அவருக்கு இருக்கும் நேரமும் குறைவு. மரணம் நெருங்கிக்கொண்டிருக்கையில், உயிர் போவதற்கு முன் தன் கடமைகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அழுத்தம் வால்டர் வைட்க்கு இருக்கும்.

இந்தநிலையில், போதை பொருட்களை கடத்தும் கும்பலில் ஒருவனாக இருக்கும் முன்னாள் மாணவனுடன் சேர்ந்து தனது வேதியல் மூளையை பயன்படுத்தி கிரிஸ்டல் மெத் எனப்படும் போதை பொருளை தயாரித்து போதைப்பொருள் உலகத்தின் அதிபதி ஆகிறார் வால்டர் வைட். வால்டர், ஜெஸ்ஸி பின்க்மேன் மற்றும் இவர்களுடன் தொடர்புடையவர்களின் வாழ்க்கை மாற்றம் தான் இந்த வெப் சீரீஸ். 2008 முதல் 2013 வரை மொத்தம் 5 சீசன்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக வெளியான தொடர் பெட்டர் கால் சால். El Camino: A Breaking Bad Movie என்கிற திரைப்படமும் 2019ல் வெளியானது. உலகளவில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பிரேக்கிங் பேட் வெப் சீரிஸ்தான், ஐஎம்டிபியில் 10க்கு 10 ரேட்டிங் இருக்கும் ஒரே வெப் சீரீஸ் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஒரு பாலைவனக் காட்சியில் எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரீஸின் பைலட் எனப்படும் முதல் எபிசோடில், ஹைசன்பெர்க் வெள்ளை நிற உள்ளாடை அணிந்திருப்பார். இந்த உள்ளாடை தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது. இந்த ஏலத்தில், பிரேக்கிங் பேட் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட மற்ற பொருட்களுடன் சேர்த்து, வால்டர் வைட் கதாபாத்திரம் அணிந்திருந்த உள்ளாடைகளும் இடம்பெற்றுள்ளன. இதன் விலை 5000 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 4,13,310 ரூபாய். இதுவரை 14 முறை ஏலம் கேட்கப்பட்டுள்ளது என்று இந்தியா டைம்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆன்லைன் எண்டெர்டெயின்மெண்ட் மெமொரபீலிய ஆக்‌ஷன் சார்பில் நடத்தப்படும் ஏலம் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கிட்டதட்ட 1000 டிவி மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்படும். மேலும், பல பிரபலமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் தொடர்பான நினைவுச் சின்னங்களும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக், 21 ஜம்ப் ஸ்ட்ரீட், ஏலியன் மற்றும் பெட்டர் கால் சால் போன்ற பிரபலமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பொருள்களும் இந்த ஏலத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

கர்நாடக துப்பாக்கி சூடு சம்பவ உயிரிழப்பு...! ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்...!

Sat Feb 18 , 2023
கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் […]

You May Like